GTC (Tamil)

கோல்ட்லேண்ட் டிரேடிங் கொம்பனி (Goldland Trading Company) பன்னாட்டு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, ஹார்ட்வேயார் மற்றும் கட்டிடப் பொருட்களான இரும்பு மற்றும் பிற பொருட்கள் தொடர்பான வாணிபத்தில் நிபுணத்துவம் பெற்றது. இலங்கை, இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள எமது அலுவலகங்களினூடாக 15 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தினைக் கொண்டுள்ளோம். எமது தொழில்முறை ஊழியர்கள் பொருட்களைக் கண்டறிந்து வழங்கல் (sourcing products) மற்றும் அது தொடர்பான வாணிபத்தில் பன்னாட்டு அளவில் மிகவும் சிறப்பான அனுபவத்தினை கொண்டுள்ளனர். உலகளவில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும், இலங்கையிலும் மிகவும் திருப்திகரமான வாடிக்கையாளர்களைகட கொண்டுள்ளோம். எங்களால் இலகுவான (வாணிப சுற்றுலா உட்பட்ட) வாணிபத்தை மேற்கொள்ள முடியும்.  


மேலும், எமது பங்காளிகள் சுற்றுலாப் பயணம், விமாணப் பயணச்சீட்டு, வீசா போன்ற சுற்றுலாத்துறையினையும் அதனோடு தொடர்புபட்ட போக்குவரத்து வசதிகள் போன்றவற்றையும் சிறப்பாக மேற்கொள்கின்றனர். Bookingmark Holidays (Pvt) Ltd இலங்கை சுற்றுலாத்துறையியனால் அங்கிகரிக்கபட்ட ஒர் முகவர் நிறுவனம். Key Travels (Pvt) Ltd பயணிகளுக்கு பயணம் தொடர்பான சிறப்பான சேவை செய்யும் IATA வினால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனம். மேலும், எங்களால் கொழும்பு நகரை மையப்படுத்திய கொழும்பு சிட்டி டுவர் (Colombo City Tour) என்ற சுற்றுலாவும் மேற்கொள்ளப்படுகிறது. எம்மிடம் பயணத்திற்கு ஏற்ற பல வகையான வாகனங்களும் நட்புடன் பழகும் சாரதிகளும், இது தொடர்பான வலையமைப்பும் உள்ளன.